தமிழ்சினிமாவில் திரைக்கதை எழுதறவங்க குறைஞ்சுட்டாங்களே என்ற கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார் மிஷ்கின். அதுதான் சார் என் கோபமும். இப்ப புத்தகம் படிக்கிற பழக்கம் குறைஞ்சிருச்சு. இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர்களை நினைச்சா எனக்கு கோபம் வருது. இப்ப என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்டா, பாரதிராஜா, இளையராஜாவெல்லாம் படிச்சுட்டா சினிமாவுக்கு வந்தாங்கன்னு கேட்கிறான் ஒருத்தன். கெட்ட வார்த்தையிலேயே திட்டி அனுப்பிச்சுட்டேன்.
அவங்க வாழ்க்கையை, கிராமங்களை, மனிதர்களை படிச்சவங்க. படிக்காம படைப்பாளி ஆக முடியாது. சினிமா எடுக்கணும்னு சென்னைக்கு வர்ற சராசரி 21 வயது இந்திய இளைஞனுக்கு என்ன அனுபவம் இருக்கும்? வீட்டுக்கு பக்கத்தில் யாராச்சும் ஓடிப்போயிருப்பாங்க. அப்பா அம்மாவை போட்டு அடிச்சிருப்பாரு. இரண்டு கொலை தற்கொலை பார்த்திருப்பாங்க. ஒரு காதல் பண்ணியிருப்பான். ஆயிரம் தடவை சுய இன்பம் அனுபவிச்சிருப்பான். இதை தாண்டி என்ன வாழ்க்கை அனுபவம் இருக்கும்?
இதை படித்துவிட்டுதான் பெரும் கோபத்தில் கொந்தளித்துவிட்டார்கள் உதவி இயக்குனர்கள். மன்னிப்பு கடிதத்தை கொடுத்தனுப்பிவிட்டு மூணாறில் தங்கியிருக்கிறாராம் மிஷ்கின்.
No comments:
Post a Comment