Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

நீ என்னைக் காதலி.

கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே

காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே

தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்

சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்

ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்

ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி

என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே

நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்

புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே

இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்

இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்

அப்போதாவது
நீ என்னைக் காதலி.

யாரறிவார் இவள் மனதை?

வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய
காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே
கனவாகியது எனக்கு....

வேதனை என்ற சொல்லுக்கு
வரை விலக்கணம் தனைக் கூறியது
கன்னங்களின் ஓரம்
காய்ந்துபோன கண்ணீர்த்துளி..

எனைவிட்டு புன்னகையும் பொன்னகையும் தொலை தூரம் தொலைந்து போனதால்
பொன்னகையில் பார்ப்பதை விட
புன்னகையில் பார்ப்பது என்னை
பகல் நேர பௌர்ணமிகளாய்
தோன்றியது சிலருக்கு ....

எனை நோக்கி அனுதாபம்
அடைந்த சில நட்புகளை
மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்
காயம் கண்ட இதயமதை மீண்டும்
காயப்படுத்திய உறவுகளை இன்னும்
ஏற்கவில்லை என் மனம் ஏனோ?

காலங்களும் கரைந்து சென்றது
காட்சிகளும் மாறியது
கனவுகள் போல
கண்கள் கண்ட கனவுகளும்
கலைந்து சென்றது
கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு
விடை தேடுகின்றேன்
நான் நாளும்..

மனித மனங்களும் மரித்து விட்டது
இறைவனோ மௌனம் காக்கின்றான்
கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

பேதை இவள் பேதலிக்கின்றாள்
வரும் கால வாழ்வை எண்ணி
யாரறிவார் இவள் மனதை......

வேண்டும் என்றே......

"எனக்கு பிடித்த மாதிரித்தான்
நான் இருப்பேன்" ,
என்று சொல்லிவிட்டு ,
வீம்புக்கு ஏதாவது செய்கிறாய் ,,,.
ஏன்டி,
உன்னை பிடித்த எனக்கு ,
இப்படி ,
உனக்கு பிடித்ததை சொல்கிறாய்....

பெண்ணுக்கு 'எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்'

ஆண், பெண் என்ற பிரிவெல்லாம் இப்போது போயே போச்சு! ஆணுக்குரிய அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். ஆனால் பெண்ணுக்குரிய அனைத்து குணங்களையும் ஆண்கள் பெற்றிருக்கின்றனரா என்றால் அதுதான் இல்லை என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.

எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரமும் பெண்களிடம் இருந்தால் இன்னும் சிறப்பு.

அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான். அப்படி வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறும் ஸ்மார்ட் பெண்களின் சிறப்புக் குணங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்,

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 18 முதல் 33 வய துக்குரிய பெண்களிடம், 'எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்' என்ற கேள்விக்கு நான்கு குணங்களை கொண்ட ஆண்களைப் பிடிக்கும் என்று பதில் கூறினர்.

அவர்கள் கூறிய நான்கு குணங்கள், குழந்தைகள் மீதான விருப்பம், ஆண்மைக்குரிய விஷ யங்கள், உடல் ரீதியான கவர்ச்சி, கருணை உள்ளம் இவையே பெண்கள் 'டிக்' செய்த குணங் கள். இயல்பாகவே குழந்தைகளுக்கு பெண்கள் என்றால் மிகவும் விருப்பமான விஷயம். அதே குணம் ஆண்களுக்கும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நீண்ட நேரம் ரொமான்ஸ் செய்யும் ஆண்களையும் பெண்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டமில்லாத ஆண்களையே பிடிக்குமாம்!

நிர்வாகத் திறன் என்பது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்பது பொறுமை குணத்துடன் செயல்படும் பெண்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்றும் சொல்லலாம்.

தலைமைப் பண்புக்குரிய குணங்களான பணிவு, துணிவு, கனிவு என மூன்றும் ஒருங்கே அமைந்துள்ளதால் பெண்கள் தலைமையை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. இதை நீங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள நிறுவனங்களில் கண்கூடாக பார்க்கலாம்.

பெண்கள் பார்வை என்பது மிகவும் கூர்மையானது என்கிறார்கள் கணவன்மார்கள். அவர்கள் ஒரு வீட்டையோ அல்லது மனிதர்களையோ ஒரு முறை பார்த்தாலே போதும், துல்லியமாக கணித்துவிடுகின்றனர்.

அதேபோல் தங்களுடைய கணவன்மார்களின் தவறுகளை... மனதில் இருக்கும் விஷயங்களை குறிப்புகளால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் பெண்கள். அதனால்தான் கல்யாணமான ஆண்கள், தங்கள் மனைவியிடம் மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்கின்றனர்.

இன்றைய அவசர உலகில் சைக்கிள், டூவீலர், கார் மற்றும் இதர வாகனங்களையும் பெண்கள் இயக்குகின்றனர். இந்த வாகனங்களை ஆண்கள் ஓட்டும்போது அதிக வேகம், போதை, கவனமின்மை போன்ற காரணங்களால் 77 சதவீதம் விபத்துக்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. ஆனால் பெண்கள் இந்த வாகனங்களை ஓட்டும்போது விபத்து என்பது மிகமிக குறைவு என்பது பெண்களுக்கான போனஸ் குணம் என்கிறது அந்த ஆய்வு.

நிதி நிர்வாகத்திலும் இன்றைய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது வாங்கப்படும் லோன், கிரெடிட் கார்டு மற்றும் பிற நிதி விஷயங்களில் மிகச் சரியாக நடந்து கொள்கின்றனர் பெண்கள். வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களான ஆபரணங்கள் மற்றும் கார் வாங்குவதில் கூட துல்லியமாக கணித்து வாங்குவதில் பெண்கள் கில்லாடிகள்! தொலை நோக்குப் பார்வையில் பெண்களை ஆண்கள் மிஞ்ச முடியாது என்பதே நிதர்சன உண்மை.

இன்றைய நவநாகரீகப் பெண்கள் இணையதளம், ஈமெயில் போன்ற நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது ஒரு லண்டன் சர்வே. அதுமட்டுமின்றி, ஷாப்பிங், பயணம் போன்ற அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத் துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.சேமிப்பிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் பெண்கள். சேமிப்பு குறித்த விஷயங்கள், ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் பெண்கள் முதலீடு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் நிதி முதலீட்டாளர்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கான விஷயங்களிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். குறிப்பாக பற்கள் விஷயத்தில்... உணவுகளை மட்டுமே பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆரோக்கியம் கெடும் வாய்ப்பு குறைவு. மேலும் பெண்கள் எப்போதும் பற்களை சுத்தமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

எப்போதுமே பெண்களுக்கே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். மேலும் எதையும் நன்கு யோசித்து செயல்படும் குணம் கொண்ட பெண்கள் அவசரப்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் என்பதும் குறைவு. இதனால் அவர்கள் அடிக்கடி சின்னச் சின்ன சிக்கல்களில் சிக்கி முழிப்பதில்லை என்பதும் பெண்களுக்கான சிறப்பு.

கல்லூரியில் படிக்கும் பெண்கள், தங்களுடைய 'டிகிரியில்' கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். படிக்கும் விதத்திலும் ஆண்களைவிட பெண்கள் வித்தியாசப்படுகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் தேர்வுக்கு முன்னர் மட்டுமே நள்ளிரவு வரை, அதிகாலை என்று படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை, அன்று மாலையே படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

சரி... எப்படிப்பட்ட ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது?

பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் மிகவும் முக்கியமானது சுத்தம், சுகாதாரம்.

ஆனால் ஆண்கள் அப்படியில்லை... பல நாட்கள் துவைக்காத ஜட்டி, கெட்ட வாடை வீசும் சாக்ஸ், அலசப்படாத தலை முடி மற்றும் உடை விஷயங்களில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட ஆண்களை பொதுவாகவே பெண்கள் வெறுக்கின்றனர்.

பொது இடங்களில் கூடும்... பேசும் கூட்டங்களில் பெண்களின் பேச்சு மிகவும் தெள்ளத்தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டம், வாடிக்கையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட இடங்களில் பெண்களின் பேச்சும், செயலும் நாளுக்குநாள் மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பெண்களின் உடல் நலம் மற்றும் மன உறுதி.

அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு, தேவையில்லாத நபரிடம், தேவையில்லாமல் பேசும் பலவீனம் பெண்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகை, மது, சூது போன்ற கெட்ட விஷயங்களிலும் பெண்களுக்கு நாட்டமில்லாததால் இவர்களுடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை.

இப்படி கல்வி, விளையாட்டு, தொழில் மற்றும் வேலை என எந்த துறையாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதித்து வருகின்றனர் பெண்கள்.

காதலிப்பது எப்படி?

பசங்களுக்கு:

முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி?

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு!

இரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும்.

இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி ... தானா வரும்.

மூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.

நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) "நான் உன்னை காதலிக்கின்றேன்" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.

நான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.

கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.

ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..

Pls go to step one.

சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன ;)

-------------------------------------

ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?


ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...

1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.

2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து வாங்குவாள்.

4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.

5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன் "சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...

6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)

7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு, கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....


8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.

9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்" எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?

10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.

12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

13) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)

14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் வரும்.

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள்

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)


10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

முத்தம் தர முத்தான யோசனைகள் பத்து!

அன்பின் வெளிப்பாடு முத்தம். அதிகபட்ச ரசனை தேவைப்படும் ரொம்பவே அழகான விஷயம்!
காதலர்களின் ஆன்மா உதடுகளில் சந்திக்கும் வைபவம் முத்தம்.

சீனப் பழமொழி ஒன்று... முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல... குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்! (அதிலும், பார்ட்னர் அம்சமாக அமைந்து விட்டால், அச்ச்ச்றா...)

ஆனால், முத்தம் கொடுக்கத் தெரியுமா உங்களுக்கு...?
டென்ஷனாக வேண்டாம். கேள்விக்குக் காரணம் உண்டு!

ஏதோ வம்படிக்கு இழுத்துப் பிடித்து பசக் என்று கொடுப்பது... கச முசா என்று அவசரமாக திணித்துத் தொலைவது... எசகு பிசகாக குதறி வைப்பது... லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், இதெல்லாம் முத்தமில்லீங்கோ...!

கமல்ஹாசனோ, இம்ரன் ஹஸ்மியோ கதாநாயகிக்கு சட்டென்று இச்சொன்று தருவார்களே... அது போல் செய்வது பெரிய கம்ப (அல்லது, காம) சூத்திரெமல்லாம் இல்லீங்க... ரொம்ப சிம்பிள். இதற்கு கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள், பத்து. இந்த பத்து கட்டளைகளை பின்பற்றி கிஸ் அடித்துப் பாருங்கள். அப்புறம், உங்கள் காதல் அல்லது கல்யாண வாழ்க்கையில் எல்லா நாளும் பவுர்ணமி தான்!

முதல் கட்டளை:

சத்தான முத்தத்துக்கு முதல் எதிரி... வேற என்னங்க... "தாத் கி பத்பூ" என்று தூர்தர்ஷன் காலத்தில் இருந்து சொல்வார்களே, அந்த வாய் துர்நாற்றம் தான். பேசினால் பூ வாசம் புறப்பட வேண்டாம். குறைந்த பட்சம் குமட்டிக் கொண்டு வரக் கூடாது.
ஓவராக 'தம்'மடித்தல், புகையிலைப் பொருட்கள், உடல் நலக் கோளாறு, கண்டதைத் திண்பது என்று ஏகப்பட்ட காரணங்களால் வாய் நாற்றம் ஏற்படுகிறது.
காதலியோ, காதலனோ, மனைவியோ இது பற்றி பளீரென்று வெளியில் சொல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், துர்நாற்றத்துடன் தரப்படும் முத்தத்தில் அத்தனை சுவாரஸ்யமோ, காதலோ இருக்காது டியர்... அதோடு, அடுத்த முறை முத்தம் தர முற்பட்டால் பார்ட்னர் அதிர்ச்சி அடையக் கூடாது தானே...?

எனவே, முத்தம் கொடுக்க மூஞ்சியை நீட்டும் முன் கொஞ்சம் வாய் கொப்பளித்துக் கொள்ளுங்கள். பிரஷ் போட்டு பல் துலக்கி விட்டுப் போனால் இன்னும் நலம். (நெருங்கி வருவாய்... நெருங்கி வருவாய்... என்ற க்ளோசப் டூத் பேஸ்ட் விளம்பரத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்)

கட்டளை இரண்டு:

முத்தம் கொடுக்கும் போது இதழ்களை குவிப்பது மட்டுமல்ல... வாயை திறப்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது.
உணர்வு பூர்வமாக முத்தம் கொடுக்க வழியே இல்லாமல் வாயை மூடிக்கொள்ளக் கூடாது. அதேசமயம், எதிரே இருப்பவரை விழுங்கிவிடும் அளவுக்கு அகககககலமாகவும் வாயை திறக்கக் கூடாது.
உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் லிப்-டு-லிப் ஆரம்பித்து, பின்னர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும். அப்போது தான் சுவை கூடும்.

மூன்றாம் கட்டளை:

நானும் கொடுக்கிறேன் பேர்வழி என்று கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து, ரப்-அன்ட்-டப்பாக இருந்தால், வெறும் சத்தம் தான் வரும். முத்தமாக இருக்காது!
உங்கள் பார்ட்னர் எப்படி கொடுத்தால் ரசிக்கிறார், எந்த மூவ்மென்டை ருசிக்கிறார், என்ன செய்தால் பிடிக்கிறது என்பதை உணர்ந்து கொடுக்க வேண்டும். அவர்களை திருப்திப்படுத்தும் போது தான், நீங்கள் இன்னும் அதிகமாக மகிழ்ச்சி அடைய முடியும். எனவே, முத்தத்தில் ஒருவித தாளகதி வேண்டும். இருவரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

கட்டளை நான்கு:

சொல்லித் தருவதில்லை மன்மதக் கலை என்பதெல்லாம் உண்மை தான். அதற்காக, முத்தம் கொடுப்பதெல்லாம் கூடவே பிறந்த கலையாகி விடுமா என்ன? கற்றுக்கொள்ளுங்கள்.
யாருக்கும் எடுத்த உடனேயே உணர்வுபூர்வமாக முத்தம் கொடுக்க வந்துவிடாது. அதற்கும் ஒரு சின்ன டிப்ஸ் உண்டு. கொஞ்சம் நேரம் செலவிடுங்கள்... காப்பி அடியுங்கள்... உங்களவர் என்ன செய்கிறார் என்பதை கவனியுங்கள். அதையே நீங்களும் செய்தால் போதும். கொஞ்ச நாளிலேயே கிஸ் அடிப்பதில் எக்ஸ்பர்ட் ஆகிவிடலாம்.

ஐந்தாம் கட்டளை:

முத்தம் கொடுக்கையில், கைகள் என்ன செய்கின்றன என்பது முக்கியமாக அம்சம்.
ஏதோ முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே தப்பி ஓடிவிடப் போகிறார் என்பதைப் போல தலை முடியையோ, இடுப்பையோ அழுந்தப் பிடித்துக் கொள்ளக்கூடாது. முத்தம் என்பது அன்பைத் தரும் களம். வலி ஏற்படக்கூடாது. கைகளை கண்ட இடத்தில் வைக்கவும் கூடாது. அதிலும் ஒரு அழகுணர்ச்சி தேவை.
உங்கள் பார்ட்னரின் கைகள், முதுகு, பின்புறம், கழுத்து, இடுப்பு போன்றவற்றின் மீது மெல்ல ஊர்ந்து செல்லலாம்.
கவனம்... உணர்ச்சி வசப்பட்டு காயம் ஏற்படும் அளவுக்கு கிள்ளி வைத்தால் அவ்வளவு தான்.

கட்டளை ஆறு:

முத்தத்தில் நாக்கின் பங்கு ரொம்ப முக்கியமானது. மெல்ல ஊடுருவி, உணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டும். ஒரு ஓவியனின் தூரிகை போல நளினமாக நடமாட வேண்டும். ஆனால், அதற்கும் அளவு உண்டு. உள் நாக்கை கவ்விப் பிடிப்பது போலவோ, பல்துலக்கும் போது வாயின் நாலாபுறத்திலும் சுழன்றடிப்பது போலவோ செய்யக்கூடாது.
நாக்கின் நுனி மட்டுமே மாய வித்தைகளை செய்ய வேண்டும். நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், எவ்வளவு பொறுமையாக, மென்மையாக நடந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகும் உற்சாகம்.

ஏழாம் கட்டளை:

முத்தங்கள் சிந்தும் போது எச்சில் அமிர்தமாகும் தான். அதற்காக, நாய் குட்டி போல் முகமெல்லாம் சளக்... சளக் என்று எச்சிலாக்கி வைக்கக்கூடாது. அது எரிச்சல் ஏற்படுத்தும்.

கட்டளை எட்டு:

முத்தம் மட்டுமே இரண்டு தனி நபர்களை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் இணைக்கிறது. இந்த இணைப்பு தான், ஆழமான, திருப்திகரமான உறவுக்கு வழிகோலுகிறது. எனவே, ஒவ்வொரு முறை முத்தமிடும் போதும் படுக்கையை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. அழகுணர்ச்சி வெளிப்பட வேண்டும். அன்பு மழை பொழிய வேண்டும்.

இது கொஞ்சம் சிரமம் தான். ஆனால், அதற்கும் தற்காப்பு வழி உண்டு.(இதுக்கெல்லாமா? என்று கேட்கக்கூடாது.)
முத்தத்துக்கு வாய் நீளம் தான் முக்கியம். கை நீளத்தை கட்டுப்படுத்தி வையுங்கள். எக்குத் தப்பான இடத்தில் சேட்டை செய்வதை (அட்லீஸ்ட் நாகரீகம் கருதியாவது) தவிர்க்கலாம்.

அதேசமயம், நீங்கள் இரண்டு பேருமே அடுத்த கட்டத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில், நோ லிமிட்ஸ்...

ஒன்பதாம் கட்டளை:

முத்தமிடும் போது, கண்களை பப்பரப்பே என்று திறந்து வைத்துக் கொண்டு திரு திருவென விழித்தபடி பார்த்துக் கொண்டே இருக்கக் கூடாது. ரோட்டில் செல்லும் போது தான் கண்களை அகல திறந்து வைத்திருக்க வேண்டும். மகிழ்ச்சியின் பாதையில் கண்கள் மூடியிருந்தால் தான் வழி எளிதாகத் தெரியும்.

அதற்காக, என்ன நடந்தாலும் கண்களை திறக்க மாட்டேன் பேர்வழி என்று இறுக்கி மூடிக்கொண்டு இருந்தாலும் கண்றாவியாக இருக்கும். அவ்வப்போது கண் மலர்ந்து, உங்கள் பார்ட்னரின் மலர் முகத்தை பார்த்தால் மனது மலரும். (எப்புடி...?)

கட்டளை பத்து:

கான்பிடன்ஸ் கண்ணா... கான்பிடன்ஸ்.... அது ரொம்ப முக்கியம்.
முத்தத்தை யார் தொடங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல. தருபவர், பெறுபவர் இருவருமே முழு மனதோடு, உறுதியோடு, நம்பிக்கையோடு முத்தமிட வேண்டும்.

இது எதற்கென்றால், பத்து அல்ல பத்தாயிரம் டிப்ஸ் கொடுத்தால் கூட, முத்தத்தின் உச்சத்தில் எதுவுமே நினைவில் இருக்காது. எனவே, முத்தமிடும் போது தன்னம்பிக்கையுடன் அணுகவும்.

ஆக... இந்த பத்து கட்டளைகளை பின்பற்றினால், இந்த நாள் மாத்திரமல்ல... வாழ்க்கையின் எந்த நாளிலும் முத்தம் சத்தாக இருக்கும். மகிழ்ச்சியின் வித்தாக இருக்கும்.

ஒரு விஷயத்தை சொன்னால் மறந்து விடக்கூடும். காட்டினால் ஓரளவு நினைவில் இருக்கும். ஆனால், செய்து பார்த்தால் மனதில் எப்போதும் பளிச்சென்று தங்கி விடும். இதன் மூலமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்...

"போதும்... போதும்... எந்த ஆணியும் புடுங்கத் தேவையில்லை. நாங்களே..." என்று யாரும் கிளம்பும் முன் ஒன்றை இறுதியாக சொல்லி நிறைவு செய்கிறேன்...

வேற என்னங்க... ஹேப்பி கிஸ்ஸஸ்!

ஈ காதலிக்க

லவ் பேர்ட்ஸ் வேண்டுமென்றாள்
கூண்டுடன்
வருவேன் என்று
காத்திருக்கும்
அவளிடம் போய்
எப்படிச் சொல்வது
சுதந்திரமாய
அவை காதலிக்க
வானம் விட்டதை.
ஏதேதோ
காரணம் சொல்லி
அவள் இதழ்களில்
முத்தமொன்று பதிக்கலாம்
அப்போது எங்கள் இதழ்களில்
வந்து மலரும்
லவ் பேர்ட்ஸின் புன்னகை.

நீ காற்று நான் மரம்

ஊரெங்கும் பனிபெய்து கொண்டிருந்த
ஒரு மார்கழி காலையில்
என் வீட்டினுள்ளே வந்து உட்கார்ந்தார்கள்
மங்கி கேப் அணிந்த அந்த இருவரும்.
அவன் புத்தகப் பையை கழட்டி ஓரம் வைத்தான்.
அவள் முதுகில் சுமந்தபடியே அமர்ந்துவிட்டாள்.
சிறிது நேரம் அமைதி காத்த இருவரும்
ஒருவரை ஒருவர் பரஸ்பரம் முறைத்துக் கொண்டனர்
'நீ அலை நான் கடல்'
என்று பாடினான் அவன்.
'கடல் இல்ல, நான் கரை'
என்று சிரித்தாள் அவள்.
என்னிடம் கேட்டபோது
கரைதான் என்றேன்.
'அய். நான் தான் ரைட்டு என்று சத்தம் போட்டாள்.
அவன் அடுத்து தேன் தேன் தேன் என்றான்.
இருவரும்
காற்றாக மாறிக் கொண்டிருந்தார்கள்
நான் மரமாகி தலையாட்டிக் கொண்டிருந்தேன்

காதல் கவிதை!

காதல் கவிதை!


உன் இமைகள் துடிக்க
உன் இனியவன் வரவு நாடி

உன் இமை முடாது
உன் இதையம் திறந்து

உள்ளம் இறங்க
உன் இதழ்கள் வறண்டிட

உதறிய இரவுப் பூக்கள்
உன் ஈரடிக்குள் கசங்கிட

உன் வரவேற்பு கரைகிறதே!!!

தத்துவ கவிதை


அதிக இன்பத்தில் ஆழாதே

அறிவினை இழந்து செல்லாதே

உன் அன்புக்காக......

தூசி விழுந்த கண்ணும்,

உன்னை பிரிந்த இதயமும்

எப்போதும் கலங்கிக்கொண்டுதான் இருக்கும்.....

உன் அன்புக்காக......

காதலி....!

வெறும் நல்லவனை மட்டும் விரும்பும் பெண்ணை நீ ஒருபோதும் காதலிக்காதே,

ஏனென்றால்,

நீ அவளுக்காக நிறைய மாறவேண்டும்,மாற்ற வேண்டும்,மறைக்க வேண்டும்,இழக்க வேண்டும்,நிறுத்த வேண்டும்,திருத்த வேண்டும்,திருந்த வேண்டும்

நீயே நன்றாக யோசித்து பார்....

மிக மிக நல்லவந்தான் வேண்டும் என்கிற பெண்ணுக்காக உன்னையே நீ மாற்ற போகிறாயா?

நிச்சயமாக உன்னால் நிறைய மாற முடியாது,மாற்ற முடியாது,மறைக்க முடியாது,இழக்க முடியாது,நிறுத்த முடியாது,திருத்த முடியாது,திருந்த முடியாது

நிறைய ஆண்கள் மறைக்க முற்படுவதனாதான் காதல் திருமண வாழ்க்கையில் உண்மைகள் தெரியவரும்போது அதிக பிரச்சினைகள் வருகின்றன.

அதனால்,

உன்னைப்பற்றி நன்கு அறிந்த பெண்ணை காதலி....!

அல்லது,

உண்மைகளை சொல்லி உன்னை ஏற்றுகொள்ளும் பெண்ணை காதலி....!

உண்மையான அன்பு

எவ்வளவுதான் மனம் காயப்பட்டாலும்,

நாம் நேசித்த ஒரு இதயத்தை மட்டும்,

என்றும் நம்மால் வெறுக்கவே முடியாது......!

அதுதான் உண்மையான அன்பு.....!

நான் எப்போதும் உன்னை நினைப்பேன்....

காதல் கவிதைகள்

நீ தூரத்தில் இருந்தாலும் உன் நினைவு,

என் இதயத்தில் இருக்கும்......

நான் பார்க்க முடியாத போதும் என் பதிவு,

வந்து நான் நினைப்பதை சொல்லும்.....

[x]

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites