"ஒரே வாரத்தில் குண்டாக வேண்டுமா? ஒல்லியாக வேண்டுமா?' - பஸ் மற்றும் ரயில் நிலையங்கள், சிறுநீர் கழிக்கும் இடங்கள் என, தலைநகரில் துவங்கி சிறு நகரம் வரை அனைத்து சந்து, பொந்துகளிலும் ஆக்கிரமிக்கும், "பிட்' நோட்டீஸ்களின் வாசகங்கள் இவை. வளரும் தொழில்நுட்பத் துக்கு ஏற்ப, எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் வரை இந்த விளம்பரங்கள் விரவியுள்ளன.
காலை உணவாக "மேகி' பின் கடித்துக் கொள்ள கொஞ்சம் பப்ஸ்; மாலை சைடு டிஷ் பானிபூரி; மயக்கம் வந்தால் குளிர்பானம் என்று, உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றத்தின் பிரதிபலிப்பே, இது போன்ற நோட்டீஸ்களின் பெருக்கத்திற்கு காரணம். சாப்பிட, தூங்க, உடற்பயிற்சி செய்ய, குடும்பத்தையோ, தன்னையோ கவனித்துக்கொள்ள நேரமில்லாமல் வேகமாய் ஓடும் நகர வாழ்க்கையில், நம் உடலோடு வியாதிகள் எளிதாக விருப்பக் கூட்டணி அமைத்து விடுகின்றன. சென்னையில் பெருகியுள்ள ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் இயல்பு வாழ்க்கையே தலைகீழாகிவிட்டதால், உடல் பருமனில் துவங்கி, பெயர் சொல்ல முடியாத வியாதிகள் எல்லாம் அவர்களை வாட்டி வருகிறது.
இந்த மாறுபட்ட பழக்க வழக்கங்களால், அதிகளவு குண்டாகவோ அல்லது ஒல்லியாகவோ மாறுகிற குறைபாடு, பெரும்பான்மையானவர்களுக்கு ஏற்படுகிறது. இவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக, சில தனியார் மருத்துவ மையங்கள் சென்னையில் செயல்படுகின்றன. இந்த பாதிப்பில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், கிளி ஜோதிடம் பார்ப்பவர்கள் போல், சிகிச்சையளிக்கும் "விசேஷ' மருத்துவ மையங்களின் எண்ணிக்கையும் தெருவெங்கும் பரவிக் கிடக்கிறது. இவர்களது கவர்ச்சி விளம்பரங்களைக் கண்டு, மக்கள் சிகிச்சைக்காக அங்கு செல்கின்றனர். அப்படிச் செல்பவர்களுக்கு இதுபோன்ற மருத்துவ மையங்கள் மூலிகைப்பவுடர்கள் கொண்ட மருந்துப் பொருட்களோ அல்லது "கேப்சூல்'களோ கொடுக்கிறது. அதற்காக குறைந்தபட்சம் 400 ரூபாயிலிருந்து பல ஆயிரம் வரை, கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
......to be continued.
No comments:
Post a Comment