பகல் நேரத்தில் தூங்குவது மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது

பகல் நேரத்தில் தூங்குவது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற கருத்து பரவலாக உள்ளது. தற்போது பகலில் சிறிய தூக்கம் போட்டால் மூளையின் செயல்பாடு அதிகரித்து அறிவு திறன் வளரும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்கான ஆய்வை பெர்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். தொடக்கத்தில் இவர்கள் 39 பேரிடம் ஆய்வை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில் அவர்களை நன்றாக தூங்கவைத்து விட்டு காலையில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர். அதே வேளையில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிட நேரம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தனர்.

இவர்கள் இருதரப் பினரின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டது. இதில், பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளைசெயல்பாட்டு திறன் அதிக அளவில் இருந்தது.

இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் இதே முடிவுதான் கிடைத்தது. இந்த ஆய்வறிக்கை கலிபோர்னியாவில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

[x]

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites